காவல்துறையுடன் இணைந்து ரத்த தான முகாம்

துபாய் ஈமான் சார்பில் துபாய் காவல்துறையுடன் இணைந்து ரத்த தான முகாம் துவங்கியவுடன் ஆர்வத்துடன் ரத்த தானம் அளித்த துபாய் காவல் துறையை சார்ந்த பெருமக்களுக்கு ஈமான் சார்பில் காவல்துறையின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது On behalf of the Dubai Eman Cultural Center, a heartfelt thanks was extended to the Dubai Naif Police for their dedicated service, as they enthusiastically participated in donating blood at […]

உழைப்பு என்றென்றும் உயர்வு

உழைப்பு என்றென்றும் உயர்வு தரும் என்பதை மனதில் உரமாக்கி அதனை உணமையாக்கிய தொழில் சிகரங்களில் ஒருவராக தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தில் இருந்து அமீரகம் வருகை தந்து உழைப்பையும் நாணயத்தையும் மூலதனமாக தந்து நண்பர் அன்வர் ‘அன்வர் டைப்பிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கி வளர்ச்சி பெற்று தனது தமிழ்நாட்டை சேர்ந்த 100க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து 12 ஆண்டுகள் நிறைவு செய்த அன்வர் குழுமத்தின் 12ம் ஆண்டு விழா அஜ்மானில் அமீரகத்தின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் நடைபெற்றது. […]

பரணி எனும் அமீரக கலை இலக்கிய விழா

துபாயில் பரணி எனும் அமீரக கலை இலக்கிய விழா அதன் நிறுவனர் சேனியோ தலைமையில் நடைபெற்றது அதில் 10 குழந்தை எழுத்தாளர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் ரொக்க பரிசினை ஈமான் தலைவர் பிஎஸ் எம் ஹபீபுல்லாகன் வழங்கி வாழ்த்தினார் உடன் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகள் ஹாமிது ,அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர் All reactions: 4747

தேசிய தின விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் ஈமான் கலாச்சார மையம் சார்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள தேசிய தின விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக சென்னை புது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பி எஸ் எம் இயக்குணர் சலீம் அன்சாரி தலைமையில் பங்கேற்றனர் . நாள்:- டிசம்பர் 2, 2024

CDA உயர் அதிகாரிகள் மற்றும் ஈமான் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பு

அமீரக அரசின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் CDA உயர் அதிகாரிகள் மற்றும் ஈமான் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமீரக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகிகள் வருகைபுறிந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விவரங்களை கேட்டு, ஈமான் அமைப்பின் செய்த பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இதில் ஈமான் அமைப்பின் தலைவர் PSM ஹபிபுல்லாகான் காக்கா, பொருளாளர் யஹ்யா (zoom),துணைத்தலைவர் கமால் காக்கா, பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது […]

ஈமான் பொருளாளர் யஹ்யா அவர்களின் இல்ல திருமண அழைப்பு

துபாய் இந்திய தூதரக துணை தூதர் சிவன் அவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பிளாக் துளிப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஈமான் பொருளாளர் யஹ்யா அவர்களின் இல்ல திருமண அழைப்பிதழை பிளாக் துலிப் யாசர் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்

துபாய் வருகை தந்த அப்துல் ரஹ்மான் அண்ணன்

10-11-24 சென்ற வாரம் துபாய் வருகை தந்த அப்துல் ரஹ்மான் அண்ணன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் வெள்ளிக்கிழமை திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு துபாயில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

ஈமான் அமைப்பின் பொருளாளர் பிளாக் துலிப் யஹ்யா அண்ணன் அவர்களின் இல்ல திருமண விழா

துபாய் ஈமான் அமைப்பின் பொருளாளர் பிளாக் துலிப் யஹ்யா அண்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பு நிகழ்ச்சி. நன்றி – #அரசியல்_ஆத்மா All reactions: