இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டத்தின் தொடர்ச்சியாக.. அல் பரகா ரத்த வங்கி வளாகத்தில் ரத்ததான முகாம்
துபாய் ஈமான் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம்
இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் அல் பரகா ரத்த வங்கி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
இந்த முகாம் ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லாகான் தலைமையில், பொது செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் சமூக நல செயலாளர் முஹம்மது இம்தாதுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் பீர் ,சேக் ,சமீர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த வகையை கொடையாக அளித்தனர்.
ரத்ததான முகாமுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஈமான் நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்
ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா நன்றி கூறினார்






