கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில்
கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில்
இருந்து எங்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் அவர்கள் கூறியதாவது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உமல் குயின் [Umm Al Quwain] என்னும் இடத்தில், தமிழகத்தைச் சார்ந்த இந்திய ஒருவர் இறந்து சடலமாக கிடைக்கிறார்.
அவரின் கடவுச்சீட்டு [Passport] மட்டும் இருக்கிறது இதை வைத்து இறந்த அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, எங்கள் ஈமான் அமைப்பிடம் கூறினார்கள்.
உடனடியாக எங்கள் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் Jmk Jamaludeen Jamal என்னை தொடர்பு கொண்டு,
இதைப் பற்றி எங்கள் ஈமான் அமைப்பின் முகநூல் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இந்த பதிவை பார்த்துவிட்டு நண்பர்கள் பலர் எங்களை தொடர்பு கொண்டார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களிடமிருந்து உரிமம் பெற்று, இறந்தவரின் உடலை ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது, இதற்காக பல நல்லுள்ளம் கொண்டவர்கள் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாட்களில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இறந்தவரின் பூத உடலை ஊருக்கு நல்லபடியாக அனுப்பி வைப்பதாக இருக்கிறோம்…
இதற்காக உதவி கொண்டு இருக்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி


