ஈமான் அமைப்பின் சேவையை பாராட்டி இந்திய அரசின் தூதரகம் சார்பில் விருது
அமீரக அரசின் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்ட நான்கு மாத காலமாக
விசா காலம் முடிந்து பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளால் நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் குறிப்பாக துபாயில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப பல்வேறு அமைப்புகள் பணியாற்றினர் அவர்களோடு ஈமான் அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றியமைக்கு இந்திய அரசின் துபாய் துணை தூதரகம் சார்பில் ஈமான் அமைப்பிற்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது



