#Events

அயலகத் தமிழர் அடையாள அட்டை

தமிழ்நாடு அரசின் சார்பில் அயலகத் தமிழர் அடையாள அட்டை (NRT ID Card) வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதே சமயம் தொடக்கத்தில் சில மாதங்களாக இதற்கான பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை இலவசமாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கடந்த மாதத்திலிருந்து அடையாள அட்டைக்கான பதிவு கட்டணம் ரூ 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையின் அவசியம் குறித்து தமிழ்நாடு அரசு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் அறியும் படி செய்ய வேண்டும் அதுவரை இன்னும் 3 மாத காலத்திற்கு அடையாள அட்டைக்கான பதிவு கட்டணம் பெறாமல் இலவசமாக அடையாள அட்டை வழங்க வேண்டும் இதன் மூலம் வெளிநாட்டு வாழ் எளிய‌ தமிழ் தொழிலாளர்கள் பெரும் பயனடைவார்கள் எனவே தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *