#Events

ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு

45 ஆண்டுகளுக்கு மேலாக துபாய் ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு

துபாய் இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் அவர்களை ஈமான் பொருளாளரும் ,பிளாக் துலிப் நிறுவனத்தின் சேர்மனுமான யஹ்யா அவர்கள் தலைமையில் ,

பிளாக் துளிப் இம்ரான் அவர்கள் மற்றும் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ஹமீது யாசின் அவர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தாயகத்திலிருக்கும் ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லகான் அவர்கள் சார்பிலும் துணை தலைவர் கமால் அவர்கள் சார்பிலும் துணை தூதருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

அப்போது ஈமான் பொருளாளர் யஹ்யா அவர்கள் இந்திய துணை தூதரிடம் பேசும் போது , துபாய் இந்திய துணை தூதரகத்தின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கு ஈமான் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

துபாய் ஈமான் அமைப்பு 1976 ல் இருந்து துபாயில் சமூக நலன்பணிகளில் ஈமான் அமைப்பு ஈடுபட்டு வருவதையும் மேலும் சமூக பணிகளுக்கு துபாய் ஈமான் அமைப்பு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார் .

துபாய் ஈமான் அமைப்பின் சமூக நல பணிகளுக்கு இந்திய துணை தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *