அல் அய்ன் அமீரகத்தில் செயல்படும் இந்தியன் சோசியல் சென்டர் நடத்திய தமிழ் குடும்பம் பொங்கல் விழா

ஐக்கிய அரபு அமீரக – அல் அய்ன் அமீரகத்தில் செயல்படும் இந்தியன் சோசியல் சென்டர் நடத்திய தமிழ் குடும்பம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட பட்டது இதில் ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் சிறப்பாக சமூக சேவை, தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் ஹமீது யாசின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும் அமீரகத்தில் முதல் தமிழ் சமூக சேவை அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் தன்னிகரற்ற செயல்பாடுகளை பாராட்டி சிறந்த […]

துபாயில் கற்றலின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா

துபாயில் கற்றலின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் நிறுவனர் ரோஹிணி அழைப்பின் பேரில் ஈமான் அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹாமிது உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஈமான் அமைப்பின் சேவையை பாராட்டி இந்திய அரசின் தூதரகம் சார்பில் விருது

அமீரக அரசின் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்ட நான்கு மாத காலமாக விசா காலம் முடிந்து பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளால் நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் குறிப்பாக துபாயில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப பல்வேறு அமைப்புகள் பணியாற்றினர் அவர்களோடு ஈமான் அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றியமைக்கு இந்திய அரசின் துபாய் துணை தூதரகம் சார்பில் ஈமான் அமைப்பிற்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது

இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டத்தின் தொடர்ச்சியாக.. அல் பரகா ரத்த வங்கி வளாகத்தில் ரத்ததான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் அல் பரகா ரத்த வங்கி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாம் ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லாகான் தலைமையில், பொது செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் சமூக நல செயலாளர் முஹம்மது இம்தாதுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் பீர் ,சேக் ,சமீர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் […]

இந்திய குடியரசு தின விழா – 2025

இன்று 26-01-25 காலை 7 மணியளவில் துபாய் இந்திய துணை தூதரகம் சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் ஈமான் சார்பில் பொது செயலாளர் தலைமையில் ஈமான் நிர்வாகிகள் பங்கேற்றனர்

53ஆம் ஆண்டு ஆமீரக தேசிய தின விழா

கடந்த மாதம் 53ஆம் ஆண்டு ஆமீரக தேசிய தின விழா துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக சபீல் பார்க்கில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரமாதமாக நடைபெற்றது. இதில் அமீரகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி மேஜர். உமர் முஹம்மத் சுபைர் அல் மர்ஜுகி அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து மேஜர். உமர் முஹம்மத் சுபைர் அல் மர்ஜுகி அவர்களின் வீட்டில் நடைபெற்ற விருது உபசரிப்பு (மஜ்லிஸ்) நிகழ்விற்கு ENG குரூப்ஸ் உஸ்மான் அலி அவர்கள் […]

பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்ல திருமண நிகழ்ச்சி

பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்ல திருமண நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவர் பி எஸ் எம். ஹபீபுல்லகான் அவர்கள் தலைமையில் ஈமான் துணை தலைவர் கமால் அவர்கள் ,பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் ,ஈமான் நிர்வாகிகள் கீழக்கரை ஜமால் களஞ்சியம் ,ஆயப்பாடி முஜீப்,ஜலால் ,பரங்கிபேட்டை ரியாஸ் ,பைரோஸ்மற்றும் பலர் பங்கேற்றனர் சர்வதேச அளவில் மலர் வியாபாரத்தில் முன்னணி நிறுவனமான பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்லத்திருமண விழா டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 தேதிகளில் தஞ்சாவூரில் […]

“நம்ம பசங்க கிரிக்கெட் குழு (NPCT)”

கிரிக்கெட் குழுவின் 5ஆம் ஆண்டு விழா துபாயில் பணியாற்றும் தமிழ் இளைஞர்களால் 2019ஆம் ஆண்டு “நம்ம பசங்க கிரிக்கெட் குழு (NPCT)” என்ற கிரிக்கெட் குழு தொடங்கப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கிரிக்கெட் என்ற ஒற்றைபுள்ளியில் இணைந்து கிரிக்கெட் என்ற பொழுதுபோக்கிற்கான விளையாட்டை மட்டும் விளையாடாமல், அமீரக மண்ணிலும், தமிழ் தாயாக மண்ணிலும் கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், மேலும் அமீரகத்தில் சிறப்பாக செயல்படும் சமூக சேவகர்களை வருடாவருடம் தங்கள் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு […]

துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவர் PSM ஹபிபுல்லா காக்கா அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் ஹாஜா அலாவுதீன், பீர், ஹாமீது, சேக், தாஸ்தஹிர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.