துபாயில் இறந்த சிவகங்கையை சேர்ந்த பாண்டி அவர்கள்
துபாயில் இறந்த சிவகங்கையை சேர்ந்த பாண்டி அவர்களின் உடல் ஈமான் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு நேற்று ஊருக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு துபாய் ஜெபல் அலி பகுதியில் தமிழ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இறந்து விட்டதாக இந்திய துணை தூதரகத்திலிருந்து Iman Culturaஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ஹமீது யாசின் அவர்களுக்கு வந்த செய்தியை தொடர்ந்து இறந்த நபர் யாரென்று தெரியாத நிலையில் இது குறித்து விபரம் சேகரித்ததில் இறந்த நபர் பாண்டி என்பவர் சிவகங்கையை அடுத்த கொத்தன்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அவரின் பாஸ்போர்ட் நகளை வைத்து குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு இறந்த தகவலை தெரிவித்தோம்.
அதனை தொடர்ந்து அவரின் உடலை ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான பணிகளை முன்னெடுத்தோம்.
இந்திய தூரகத்தின் முழு உதவியோடு அமீரக அரசின் சட்டத்திற்கு உற்பட்டு
அணைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு நேற்று தாயகத்திற்கு உடலை அனுப்பி வைக்கப்பட்டது .
உடலை ஊருக்கு அனுப்புவதற்கான செலவுகளை இந்திய துணை தூதரகம் பொறுப்பேற்றது.
இதற்கான அனைத்து பணிகளையும் ஈமான் சார்பில் ராசிக் அவர்கள் மேற்கொண்டார் அவருடன் ஜமால் அவர்களும் இணைந்து செயலப்பட்டார்


